தமிழ்நாடு

நீலகிரி: முக்கிய குற்ற வழக்குகளில் சிறப்பாக பணியாற்றிய மோப்ப நாய் பின்டோ உயிரிழப்பு

நீலகிரி: முக்கிய குற்ற வழக்குகளில் சிறப்பாக பணியாற்றிய மோப்ப நாய் பின்டோ உயிரிழப்பு

webteam

118 முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு சிறப்பாக பணிபுரிந்த மோப்ப நாய் பின்டோ உயிரிழந்தது. இதற்கு நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத்து உள்ளிட்ட காவல் அதிகாரிகள் இறுதி மரியாதை செலுத்தினார்

இது குறித்து மாவட்ட காவல்துறை வெறியிட்டுள்ள அறிக்கையில் கூறிருப்பதாவது, நீலகிரி மாவட்ட காவல் துறையில் 4 மோப்ப நாய்கள் புலன் விசாரணைக்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் 2 மோப்பநாய்கள் குற்ற இடத்தை சோதனை செய்யவும், 2 மோப்ப நாய்கள் வெடிமருந்து சோதனை செய்யவும் பயன்படுத்தப்படுகின்றன.

இந்நிலையில் கடந்த 02.08.2011ம் வருடம் பிறந்த பின்டோ என்ற பெயர் கொண்ட மோப்ப நாய் 2012-ஆம் வருடம் காவல் துறையில் பணியில் சேர்ந்து துணைக் காவல் கண்காணிப்பாளர் அந்தஸ்த்துக்கு பதவி உயர்வு பெற்று 02.08.2019 ஆம் வருடம் பணியில் இருந்து ஓய்வு பெற்றது. பின்னர் பட்பயரில் உள்ள மோப்பநாய்கள் பராமரிப்பு கூடத்தில் பராமரித்து வரப்பட்டது.

பணிக் காலத்தில் 118 முக்கிய பிரமுகர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு சிறப்பாக பணிபுரிந்து வந்த பின்டோ, கடந்த மூன்று மாதங்களாக உடல் நிலை சரியில்லாமல் சிகிச்சையில் இருந்து வந்தது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தது. இதையடுத்து பின்டோவின் இறுதிச் சடங்கில் நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆசிஷ் ராவத், உதகை உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் மகேஷ்வரன் மற்றும் காவல் அதிகாரிகள் கலந்து கொண்டு இறுதி மரியாதை செலுத்தினர்.