தமிழ்நாடு

சுகாதாரமற்ற குடிநீரில் நிலவேம்பு கசாயம்: சித்த மருத்துவமனை மீது புகார்

Rasus

திருச்சி மாவட்டம் மணப்பாறை அரசு சித்த மருத்துவமனையில் சுகாதாரமற்ற குடிநீரை கொண்டு, நிலவேம்பு கசாயம் காய்ச்சி கொடுப்பதாக புகார் எழுந்துள்ளது.

நாளுக்கு நாள் காய்ச்சல் அதிகமாக பரவுவதால், மணப்பாறையை சுற்றியுள்ள கிராம மக்கள் நிலவேம்பு கசாயம் குடிப்பதற்காக மணப்பாறை அரசு சித்த மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில் இங்கு நிலவேம்பு கசாயம் காய்ச்சுவதற்கு, காவிரி குடிநீர் தொட்டியில் உள்ள குடிநீரையும், கிணற்றில் உள்ள தண்ணீரையும் பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்த குடிநீர் தொட்டியில் உள்ளே பூச்சிகளும், இலை தழைகளும் சுகாதாரமற்ற நிலையில் இருப்பதால், இந்த தண்ணீரை கொண்டு கசாயம் காய்ச்சப்படுவதால் அது பொதுமக்களுக்கு மேலும் நோய் பரவக்கூடிய நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் காய்ச்சல் அதிகமாக பரவும் இந்த வேளையில் மருத்துவமனையில் கசாயம் காலை 8.30 மணிக்கே தரப்படுவதாகவும், அதனை காலை 7.00 மணிக்கே கொடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். நோயில் இருந்து தற்காத்துக் கொள்ள நிலவேம்பு கசாயம் பருக வந்தால், கசாயம் பருவகுவதால் நோய் உருவாகும் சூழ்நிலை உள்ளதாக பொதுமக்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.