தமிழ்நாடு

நிலவேம்பு பயன்படுத்தினால் டெங்கு கட்டுப்படுத்தப்படும்: ஆராய்ச்சி முடிவுகள்

நிலவேம்பு பயன்படுத்தினால் டெங்கு கட்டுப்படுத்தப்படும்: ஆராய்ச்சி முடிவுகள்

webteam

நிலவேம்பு குடிநீரை பயன்படுத்துவதால் டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் கட்டுப்படுத்தப்படும் என ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.

சர்வதேச மருந்து அறிவியல் மற்றும் ஆய்வு இதழில் நிலவேம்பு குறித்த ஆராய்ச்சிக் கட்டுரை வெளியாகியுள்ளது. அதில், 3 வயது குழந்தை முதல் 79 வயதுடைய நபர் வரை ஆய்வுக்குட்படுத்தப்பட்டனர் என கூறப்பட்டுள்ளது. டெங்கு உள்ளிட்ட காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 176 பேருக்கும் நோய் பாதிக்காத இயல்பு உடல் நிலை கொண்ட 352 பேருக்கும் நிலவேம்பு குடிநீர் கொடுக்கப்பட்டு ஆராய்ச்சி செய்யப்பட்டுள்ளது. ஆய்வின் முடிவில் டெங்கு உள்ளிட்ட காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரத்த தட்டணுக்களின் எண்ணிக்கை அதிகரித்தது தெரியவந்ததாக கூறப்பட்டுள்ளது.

காய்ச்சலுக்கு காரணமான வைரஸ் கிருமியை எதிர்க்கும் சக்தி நிலவேம்புக்கு இருப்பதும் டெங்கு உள்ளிட்ட வைரஸ் காய்ச்சலை நிலவேம்பு கட்டுப்படுத்தும் என்றும் ஆராய்ச்சியின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சாதாரணமாகவே வாரத்திற்கு குறைந்தது இரண்டு முறை நிலவேம்பு குடிநீரை பருகலாம் என ஆராய்ச்சியில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த ஆராய்ச்சி நடத்த தேசிய சித்த மருத்துவ நிறுவனம், கிங் இன்ஸ்டிடியூட் ஆகியவை உதவி செய்துள்ளன.