தமிழ்நாடு

அமைச்சர்களின் விவரங்கள் தரப்படவில்லை: என்.ஐ.சி. நிறுவனம் விளக்கம்

அமைச்சர்களின் விவரங்கள் தரப்படவில்லை: என்.ஐ.சி. நிறுவனம் விளக்கம்

webteam

தொடர்பு விவரங்களை அமைச்சர்கள் கொடுக்காததால் தமிழக அரசின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவில்லை என்று அரசின் இணையதளத்தை பராமரிக்கும் என்.ஐ.சி. நிறுவனத்தின் அதிகாரிகள் கூறுகின்றனர்.

ஊழல் புகார் கொடுக்கும்படி கமல்ஹாசன் அறிக்கை வெளியிட்ட நிலையில், தமிழக அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் நிதியமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட அமைச்சர்களின் தொடர்பு விவரங்கள் திடீரென நீக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஊழல் குறித்த ஆதாரங்களை வெளியிடுமாறு இரு தினங்களுக்கு முன் கமல் வெளியிட்ட இணையதள முகவரி தமிழக அரசின் அதிகாரப்பூர்வ இணையதளமாகும். அதில் சென்று பார்த்த பலரும், அதில் இ-மெயில் முகவரி, தொலைபேசி எண் போன்ற எந்த தொடர்பு விவரங்களும் இல்லாமல் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதுபற்றி அரசின் இணையதளத்தை பராமரிக்கும் என்.ஐ.சி. நிறுவனத்தின் அதிகாரிகளைக் கேட்டபோது, தொடர்பு விவரங்களை அமைச்சர்கள் கொடுக்காததால் பதிவேற்றம் செய்யவில்லை என்று விளக்கமளித்தனர். ஆனால் கமல் அறிக்கைக்கு முதல்நாள் வரை இணையதளத்தில், பெரும்பாலான அமைச்சர்களின் இ-மெயில் முகவரி, தொலைபேசி எண்கள் உள்ளிட்ட விவரங்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது.