தமிழ்நாடு

“தென்னை மரங்களை மீட்க போராடுவோம்” - கஜாபுயல் நினைவு தினத்தில் விவசாயிகள் உறுதிமொழி

“தென்னை மரங்களை மீட்க போராடுவோம்” - கஜாபுயல் நினைவு தினத்தில் விவசாயிகள் உறுதிமொழி

webteam

\பட்டுக்கோட்டையில் கஜாபுயல் நினைவேந்தல் நிகழ்ச்சியையொட்டி விவசாயிகள் தீபம் ஏற்றி நினைவுதினம் அனுசரித்தனர். 

கடந்த ஆண்டு நவம்பர் 16ஆம் தேதி ஏற்பட்ட கஜா புயலால் அதிக பாதிப்பை அடைந்த பகுதி பட்டுக்கோட்டை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதியாகும். இந்தப் புயலால் இப்பகுதியில் உள்ள பெரும்பான்மையான மக்களின் வாழ்வாதாரமான தென்னைமரங்கள் 90% முறிந்து விழுந்து சேதமானது. கஜா புயல் பாதிப்பு ஏற்பட்டு ஒரு வருடம் ஆகி விட்ட நிலையில், இறந்த அந்த தென்னை மரங்களை நினைவுபடுத்தும் வகையில் கஜா நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. 

இதில் கலந்து கொண்ட அனைத்து விவசாயிகளும் தீபம் ஏற்றி கஜா புயல் நினைவு தினத்தை அனுசரித்தனர். மேலும் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தி தன்னம்பிக்கையூட்டும் பாடல்களையும் ஒளிபரப்பு செய்து உறுதி ஏற்றுக்கொண்டனர். இதில் கஜா புயலால் விழுந்த தென்னை மரங்களையும் தங்களது வாழ்வாதாரத்தையும் மீட்டெடுக்க போராடுவோம் என்று அனைவரும் உறுதி ஏற்றுக் கொண்டனர். அத்துடன் இந்நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்களுக்கு தேவையான நலத்திட்ட உதவிகள் மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.