புதிதாக திருமணம் முடித்த தம்பதியினர், மணமேடையில் இருந்து நேரடியாக ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் களமிறங்கினார்.
தூத்துக்குடியில் உள்ள பனிமய மாதா ஆலயத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக, இரண்டாவது நாளாக போராட்டம் நடைப்பெற்று வருகிறது. ஆலய வளாகத்தில் பந்தல் அமைத்து கருப்புக்கொடி கட்டி, மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தூத்துக்குடி சின்னக்கோவில் சர்ச்சில் ஜோசப் மற்றும் ஷைனி ஆகிய இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த புதுமண தம்பதியினர் இருவரும், வீட்டிற்கு செல்லாமல் நேரடியாக போராட்டக்களத்திற்கு வந்தனர்.
அந்த தம்பதியினரை பார்த்த போராட்டக்காரர்கள், உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் புதுமண தம்பதியினர் இருவரும் கையில் பதாகைகளையுடன், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அந்த தம்பதியினர், “ஸ்டெர்லைட் ஆலையால் பலருக்கும் கேன்சர் பரவுகிறது. அதிகம் குழந்தைகள் தான் கேன்சரால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கின்றார்கள்” என்று கூறினர்.