தமிழ்நாடு

'சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க முன்னுரிமை' - மயிலாடுதுறை புதிய எஸ்பி நிஷா உறுதி

'சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க முன்னுரிமை' - மயிலாடுதுறை புதிய எஸ்பி நிஷா உறுதி

JustinDurai

மயிலாடுதுறை மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க முன்னுரிமை அளிக்கப்படும் என்று புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் நிஷா பேட்டியளித்துள்ளார்.
 
மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணாசிங் பணிமாறுதலில் சென்றதை அடுத்து மாவட்டத்தின் 3வது புதிய எஸ்.பி.யாக நிஷா இன்று பொறுப்பேற்றார். அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் பொதுமக்கள் அளிக்கும் புகார்களை பெற்று தீர்வு காண்பதற்கான நடவடிக்கை உடனுக்குடன் எடுக்கப்படும். பொதுமக்களின் பிரச்னைகளை கனிவுடன் போலீசார் தீர்வு காண்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். புதிதாக உருவாக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்தில் காவல்துறை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் குறித்து பொதுமக்கள் எவ்வித அச்சமுமின்றி புகார்கள் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். இந்த மாவட்டத்தில் என்னென்ன பிரச்சைகள் இருக்கிறது என்பதை அறிந்து அவற்றை சுமூகமான முறையில் தீர்வு காண்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று தெரிவித்தார்.

இதையும் படிக்க: ”நான் உண்மையானவள்” என கடிதம் எழுதி வைத்துவிட்டு இளம்பெண் எடுத்த விபரீத முடிவு