தமிழ்நாடு

புத்தாண்டுக்கு மெரினாவில் ஹெலிகேம் மூலம் கண்காணிப்பு

புத்தாண்டுக்கு மெரினாவில் ஹெலிகேம் மூலம் கண்காணிப்பு

webteam

புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி மெரினா கடற்கரையில் தீவிர பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் தீவிரம் அடைந்துள்ளது. சென்னை உட்பட தமிழகம் முழுவதும் புத்தாண்டை வரவேற்று கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர். இந்நிலையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க சென்னை மெரினா கடற்கரையில் 4 அதிநவீன ஹெலிகேம் மூலம் கண்காணிக்கப்பட உள்ளது.

இதற்காக 3 கி.மீ. தூரத்தில் உள்ள இடங்களை துல்லியமாக பதிவு செய்யும் ஹெலிகேமின் பாதுகாப்பு ஒத்திகை இன்று நடைபெற்றது. இதுதவிர சென்னை முழுவதும் புத்தாண்டு பாதுகாப்புப் பணியில் 15 ஆயிரம் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். மெரினா உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் மட்டும் 3,500 போலீஸார் பாதுகாப்புப் பணியில் உள்ளனர். மேலும் நல்லிரவில் நடைபெறும் பைக், கார் பந்தயங்களைத் தடுக்க 20 கண்காணிப்பு சோதனை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.