தமிழ்நாடு

புதிதாக கட்டப்பட்ட நீர்தேக்க தொட்டியில் கசிவு - பொதுமக்கள் அதிருப்தி

புதிதாக கட்டப்பட்ட நீர்தேக்க தொட்டியில் கசிவு - பொதுமக்கள் அதிருப்தி

webteam

அரியலூர் அருகே புதிதாக கட்டப்பட்ட நீர்தேக்க தொட்டியில் கசிவு ஏற்படுவதால் பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

அரியலூர் மாவட்டம் தேளுா் கிராமத்தில் உள்ள பெரியார் நகரில் 120க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு இருந்து வந்ததால் 2019-2020ம் ஆண்டு பொதுநிதியில் இருந்து 8 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் ஆழ்துளை கிணறு அமைத்து சுமார் 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்தேக்கத் தொட்டி கட்டப்பட்டுள்ளது. இதன்மூலம் அப்பகுதி மக்களுக்கு குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், இந்த நீர்தேக்க தொட்டி கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திறக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டில் இருந்து வந்த நிலையில், தற்போது நீர்தொட்டியில் இருந்து நீர் கசிவு ஏற்பட்டுள்ளது.  இதனால் தண்ணீர் வீணாக வெளியேறி குளம் போல் காட்சியளிக்கிறது. 

எனவே மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து தண்ணீர் கசியும் நீர்தேக்க தொட்டியை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.