தமிழ்நாடு

100 ஆண்டுகளாக சாலை இல்லாத மலை கிராமத்திற்கு புதிய சாலை: இனிப்பு வழங்கிய மக்கள்

100 ஆண்டுகளாக சாலை இல்லாத மலை கிராமத்திற்கு புதிய சாலை: இனிப்பு வழங்கிய மக்கள்

kaleelrahman

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மலை கிராமங்களில் சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட உள்ள நிலையில், மலைகிராம மக்கள் பூமிபூஜை போட்டு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

பெரியகுளம் அகமலை ஊராட்சியில் உள்ள 8-க்கும் மேற்பட்ட மலை கிராமங்களில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக சாலை வசதி இல்லாததால், இங்கு விளைவிக்கப்படும் பொருட்களை குதிரைகள் மூலம் கொண்டு செல்லும் நிலை இருந்தது. எனவே சாலை அமைத்துத் தரக்கோரி இங்கு வசிக்கும் மக்கள் பலகட்ட போராட்டங்கள் நடத்தினர்.

இந்நிலையில், சோத்துப்பாறை அணை பகுதியிலிருந்து 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு புதிதாக சாலை அமைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தால் சாலை அமைக்கும் பணிகள் தொடங்க உள்ள நிலையில், 8 கிராம மக்கள் ஒன்றிணைந்து வன தேவதைகளை வழிபட்டு பூமிபூஜை நடத்தி இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.