தமிழ்நாடு

திருவனந்தபுரத்தில் புயல் எச்சரிக்கை மையம் : நிலஅறிவியல் துறை முடிவு

webteam

திருவனந்தபுரத்தில் ஒருமாதத்துக்குள் புயல் எச்சரிக்கை மையம் அமைக்க மத்திய நிலஅறிவியல் துறை முடிவு செய்துள்ளது.

கேரளாவில் நூற்றாண்டு காணாத மழை வெள்ளத்தால், கடுமையான பாதிப்புகளை அம்மாநிலம் சந்தித்துள்ள நிலையில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்திய வானிலை மையத்தின் சார்பில் தற்போது சென்னை, புவனேஷ்வர், கொல்கத்தா, அகமதாபாத், மும்பையில் புயல் எச்சரிக்கை மையம் உள்ளது. 

இந்நிலையில் திருவனந்தபுரத்தில் அமையும் புதிய புயல் எச்சரிக்கை மையம், கனமழை உள்பட மாநிலத்தின் வானிலை தொடர்பான நிலவரங்களை வழங்கும். இதேபோல் கர்நாடக மாநிலம் மங்களூரில் வானிலை ரேடாரை அடுத்தாண்டுக்குள் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் புதிய வகை தொழில்நுட்ப கருவிகளை பயன்படுத்தும் விதம் குறித்து, அனைத்து மாநிலங்களைச் சேர்ந்த பேரிடர் மீட்புப்படையினருக்கும் அடுத்த மாதத்தில் பயிற்சி அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.