தமிழ்நாடு

கிருஷ்ணகிரி அருகே புதிய தலைமுறை மன்றம் துவக்கம்

கிருஷ்ணகிரி அருகே புதிய தலைமுறை மன்றம் துவக்கம்

rajakannan

கிருஷ்ணகிரி அருகே புதிய தலைமுறை மன்றம் துவக்கப்பட்டது. புதிய தலைமுறை அறக்கட்டளையின் முதன்மை செயல் அலுவலர் ஷயாம் மன்றத்தை துவக்கி வைத்தார்.  

தமிழகம் முழுவதும் புதிய தலைமுறை அறக்கட்டளை சார்பில் மாணவர்கள் மன்றம் துவங்கப்பட்டு வருகிறது. இதில் ஆயிரக்கணக்கான மாணவர்களை உறுப்பினர்களாக இணைக்கபட்டு மாணவர்கள் எதிர்காலத்தில் எத்தகையா சவால்களை சந்திக்க உள்ளீர்கள் அதனை எப்படி எல்லாம் எதிர்கொள்வது என்பது தொடர்பாக அறிவுரைகள் வழங்கபட்டு வருகிறது. 

இதன் தொடர்ச்சியாக கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே உள்ள தாசம்பட்டி கிராமத்தில் உள்ள எம்.கே.எஸ் கோபி கிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் புதிய தலைமுறை மன்றம் இன்று துவங்கப்பட்டது. புதிய தலைமுறை அறக்கட்டளையின் முதன்மை செயல் அலுவலர் ஷயாம் கலந்துகொண்டு மன்றத்தை துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் துணை தலைவர் பிரசன்னா குமார் வரவேற்பு உரையாற்றினர். பள்ளியின் தாளாளர் புஷ்பக் தலைமை வகித்து உரையாற்றினார். 

மன்றத்தை துவக்கி வைத்து மாணவர்களிடம் உரையாற்றிய ஷயாம், இன்றைய காலத்தில் மாணவர்கள் எப்படி படிக்க வேண்டும், எதிர்காலத்தில் எப்படி சாதிக்க வேண்டும் என்பது குறித்து அறிவுரை வழங்கினார். மேலும், அப்துல் கலாம் தெரிவித்த படி கனவு காணவேண்டும் என்று வலியுறுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் நிர்வாக அலுவலர் செந்தில்குமார், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஜெயசீலன் புதிய தலைமுறை அறக்கட்டளை துணை மேலாளர் சாய்கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.