அந்தமானில் நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “நேற்றைய காற்றழுத்த தாழ்வு மண்டலம் வட தமிழக பகுதியில் கரைய கடந்த பின் தற்போது காற்றழுத்த தாழ்வு பகுதியாக வட உள் தமிழக பகுதியில் நிலவுகிறது. தெற்கு அந்தமான் அதனை ஒட்டிய பகுதியில் நாளை புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும். இது அடுத்த 48 மணி நேரத்தில் வலுபெற்று 15ம் தேதி மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியை நெருங்கும். சென்னை மற்றும் புறநகரில் அடுத்த 2 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு” என்று கூறினார்.
“மத்திய கிழக்கு மற்றும் அதை ஒட்டியுள்ள தென் கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெறக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில், பெரும்பாலான இடங்களில் மழை பெய்துள்ளது. மிக கனமழை 4 இடங்களிலும், கனமழை 24 இடங்களிலும் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக சுடலக்கோடு, கன்னியாகுமரி மாவட்டத்தில் 15 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. மழை முன்னறிவிப்பை பொறுத்தவரை, அடுத்த 24 மணி நேரத்திற்கு கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை - மிக கனமழை பெய்யக்கூடும். வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, மதுரை, விருதுநகர் மற்றும் தென்காசி ஆகிய உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்க்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
நாளை (13.11.2021) வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, மதுரை, விருதுநகர் தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
போலவே 14.11.2021ம் தேதி திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர், தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், புதுவை, காரைக்கால் கடலூர் மற்றும் ஏனைய வட உள் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
(15.11.2021): வேலூர், ராணிப்பேட்டை , திருப்பத்தூர், சேலம், தர்மபுரி, நீலகிரி, ஈரோடு, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய வட மாவட்டங்கள் மற்றும் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் மிதமான மழையும், தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
(16.11.2021) : நீலகிரி, ஈரோடு, சேலம், தருமபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய வட மாவட்டங்கள் மற்றும் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் மிதமான மழையும், தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் ஒரு சில இடங்களில் லேசானது / மிதமான மழையும் பெய்யக்கூடும்.
தொடர்புடைய செய்தி: மழை குறித்து சமூக வலைதளங்களில் பொய் பரப்புரைகளை மேற்கொள்வோர்மீது கடும் நடவடிக்கை - டிஜிபி
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): சுரலாகோடு (கன்னியாகுமரி) 15, கன்னிமார் (கன்னியாகுமரி), ஏற்காடு ISRO (சேலம்) 14, பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி), புத்தன் அணை (கன்னியாகுமரி) தலா 13, திருத்தணி (திருவள்ளூர்) 12, வாலாஜா (ராணிப்பேட்டை), பள்ளிப்பட்டு (திருவள்ளூர்), பூதப்பாண்டி (கன்னியாகுமரி) தலா 11, மயிலாடி (கன்னியாகுமரி), சோழவரம் (திருவள்ளூர்), கலசபாக்கம் (திருவண்ணாமலை) தலா 10, கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர்) 9, டிஜிபி அலுவலகம் (சென்னை), ஊத்துக்கோட்டை (திருவள்ளூர்), வெம்பாக்கம் (திருவண்ணாமலை), ஜமுனாமரத்தூர் (திருவண்ணாமலை) தலா 8, எம்ஜிஆர் நகர் (சென்னை), அய்யனாவரம் (சென்னை), சென்னை ஆட்சியர் அலுவலகம் (சென்னை), ஏற்காடு (சேலம்), காஞ்சிபுரம் (காஞ்சிபுரம்), கலவை (இராணிப்பேட்டை), கொட்டாரம் (கன்னியாகுமரி), ரெட் ஹில்ஸ் (திருவள்ளூர்), சோளிங்கர் (இராணிப்பேட்டை), நாகர்கோவில் (கன்னியாகுமரி), அரக்கோணம் (இராணிப்பேட்டை), பொன்னேரி (திருவள்ளூர்), காட்பாடி (வேலூர்) தலா 7, எம்ஆர்சி நகர் (சென்னை), பேச்சிப்பாறை (கன்னியாகுமரி), திருவாலங்காடு (திருவள்ளூர்), ஸ்ரீபெரும்புதூர் (காஞ்சிபுரம்), தரமணி (சென்னை), திருக்கழுகுன்றம் (செங்கல்பட்டு), சென்னை (நுங்கம்பாக்கம்), தருமபுரி (தருமபுரி), தர்மபுரி (தருமபுரி), ஆலந்தூர் (சென்னை), ஆம்பூர் (திருப்பத்தூர்), செங்கம் (திருவண்ணாமலை), திருவண்ணாமலை (திருவண்ணாமலை) தலா 6 என பதிவாகியுள்ளது.
வங்க கடல் பகுதிக்கு செல்லும் மீனவர்களுக்கான எச்சரிக்கை: 12.11.2021 அன்று, குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். ஆகவே இந்த தினத்தில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்
அரபிக்கடல் பகுதிக்கு செல்லும் மீனவர்களுக்கான எச்சரிக்கை: 12.11.2021 முதல் 13.11.2021 வரை கேரளா கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடைஇடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். ஆகவே இந்த தினங்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்
மேலும் விவரங்களுக்கு: imdchennai.gov.in இணையதளத்தை காணவும்.