6 மாத காலம் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளாத ஓய்வூதியதாரர்களின் வங்கி கணக்குகளை முடக்கக் கூடாது என தமிழக கருவூலத்துறை புதிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக கருவூலத்துறை ஆணையர் சமயமூர்த்தி, அனைத்து மண்டல இணை இயக்குநர்களுக்கும் புதிய சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், பழைய சுற்றறிக்கையில் 6 மாத காலத்திற்கு மேல் செயல்பாடின்றி இருக்கும் வங்கி கணக்குகளை முடக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்ததற்கு மாற்றாக உத்தரவை பிறப்பித்துள்ளார்.
ஓய்வூதியம் நிறுத்தப்படும் என்ற அச்சத்தை போக்கும் விதமாக இந்த புதிய சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. கொரோனா காலம் என்பதால் 6 மாத காலம் பணப்பரிவர்தனை மேற்கொள்ளாமல் இருந்தாலும், ஓய்வூதியம் தொடர்ந்து செலுத்தப்படும், கணக்குகள் ஏதும் முடக்கப்படாது என சுற்றறிக்கை மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.