பார்க்கிங்  முகநூல்
தமிழ்நாடு

பார்க்கிங் பிரச்னையா? சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையம் கொண்டுவந்த சூப்பர் ஐடியா!

பொது இடங்களுக்கு செல்லும்போது ஏற்படும் கார் நிறுத்துமிட பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையம் புதிய திட்டத்தை அறிமுகம் செய்ய இருக்கிறது. அதுகுறித்து பார்க்கலாம்.

PT WEB

சென்னையோட பல பகுதிகள்-ல முறையா பார்க்கிங் வசதி இல்ல. மக்கள் கூட்டம் அதிகமா இருக்கிற இடத்துலகூட சாலையோரம் கார், பைக்க நிறுத்துறதுற நெலமதான் இருக்கு. அதனால, போக்குவரத்துக்கு இடஞ்சல் ஏற்படுறது சென்னையில வாடிக்கையான ஒன்னுதான். இந்த பிரச்னைய சரிகட்டதான் புதிய திட்டத்த கொண்டு வரப்போறாங்க கும்டா (CUMTA) என சொல்லப்படும் சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையம்.

அதன்படி, வீட்டில இருந்து கார வெளிய எடுக்குறதுக்கு முன்னாடியே, நாம எங்க போறமோ அந்த பகுதியில எங்க நிறுத்தலாம்னு தெரிஞ்சிக்கிர மாதிரி செயலிய அறிமுகம் செய்யப்போறாங்க. இந்த செயலியில கார் நிறுத்துற இடத்த முன்பதிவு பண்ணி வச்சிக்கலாம். நாம குறிப்பிட்ட நேரத்துக்கு 10 நிமிஷத்துக்கு முன்னாடி செல்போன்ல அலெர்ட் வந்திரும்.

இந்த சேவை இலவசமாக இருக்காதுனும், அந்தந்த பகுதிக்கு ஏத்தமாதிரி கட்டணம் இருக்கும்னு கும்டா (CUMTA) அதிகாரிகள் சொல்றாங்க. மாநகராட்சிகுட்பட்ட பகுதிகள்-ல 5 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு வாகன நிறுத்தும் இடங்கள அடையாளம் கண்டிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவிச்சிருக்காங்க. பார்க்கிங் கொள்கைகள வகுத்த பிறகு இதுக்கான டெண்டர் விடப்படும்னு, இதற்கான வேலைகள் எல்லாம் 2 மாசத்துல முடிஞ்சிரும்னு கும்டா (CUMTA) தரப்புல சொல்லப்பட்டிருக்கு.

முதற்கட்டமா இந்த திட்டம் அண்ணா நகருக்குட்பட்ட பகுதிகள்-ல சோதனை அடிப்படையில செயல்படுத்தப்பட இருக்கிறது. அதன் பிறகு சென்னையோட முக்கிய பகுதிகளுக்கும் இந்த திட்டம் கொண்டுவரப்படும்னு தெரிவிக்கப்பட்டிருக்கு.