தேனியில் நியூட்ரினோ ஆய்வகத்திற்கு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதியை ரத்து செய்து தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
தேனி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள பொட்டிபுரம் பகுதியில் மலையை குடைந்து நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க 2011 ஆம் ஆண்டு மத்திய அரசு அனுமதி வழங்கியது. இந்தத் திட்டத்திற்கு பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பூவுலகின் அமைப்பினர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த பசுமைத் தீர்ப்பாயம், மத்திய அரசு வழங்கிய சுற்றுச்சூழல் அனுமதியை ரத்து செய்தது. இதை பற்றி கருத்து தெரிவித்த பூவுலகின் நண்பர்கள் அமைப்பினர் இந்த தீர்ப்பு வரவேற்கத்தக்கது என தெரிவித்தார்.