தமிழ்நாடு

பால் பொருட்களில் ரசாயனக் கலப்படம்? நெஸ்லே மறுப்பு

webteam

பால் பொருட்களில் ரசாயனக் கலப்படம் இருப்பதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறிய குற்றச்சாட்டை நெஸ்லே நிறுவனம் மறுத்துள்ளது. 


இதுகுறித்து டிவிட்டடில் பதிலளித்துள்ள நெஸ்ட்லே நிறுவனம் ‘எங்களது நிறுவனத்தின் பால் பவுடரான 'எவரிடே டெய்ரி ஓய்ட்னர்' சாப்பிடுவதற்கு நூறு சதவிகிதம் பாதுகாப்பானது. அமைச்சர் கூறியது போன்று காஸ்டிக் சோடாவோ, ப்ளீச்சிங் பவுடரோ சேர்க்கப்படவில்லை. உணவுப்பொருள் பாதுகாப்பில் எவ்வித சமரசமும் செய்துகொள்வதில்லை. அமைச்சரின் குற்றச்சாட்டுகள் பற்றி விசாரித்து வருகிறோம். பால் பொருட்களில் ரசாயனக் கலப்படம் இருப்பதாக வெளியான ஆய்வு முடிவுகள் தொடர்பாக தமிழக அரசிடம் இருந்து இதுவரை எந்த நோட்டீசும் வரவில்லை என  தெரிவித்துள்ளது.