கொரோனா நொய் பரவல் காரணமாக நெல்லை பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
நெல்லை மாவட்டத்தின் முக்கிய பிரசித்தி பெற்ற தளமாக பாபநாசம் விளங்குகிறது. இங்கு தினமும் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிந்து தாமிரபரணி ஆற்றில் குளிப்பது வழக்கம்.
இந்த நிலையில் கொரோனா 2-ம் அலை காரணமாக இன்று முதல் பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் குளிப்பதற்கு தடை விதித்து மாவட்ட ஆட்சியர் விஷ்ணு உத்தரவிட்டுள்ளதாக விக்கிரமசிங்கபுரம் நகராட்சி ஆணையாளர் தெரிவித்தார்.
இதையொட்டி பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் குளிப்பதற்கு யாரும் செல்ல வேண்டாம் என பாபநாசம் கோவிலை சுற்றியும், ஆற்றங்கரை ஓரங்களிலும் அறிவிப்பு போஸ்டர்கள் வைக்கப்பட்டுள்ளது. மேலும் பாபநாசம் ஆற்றில் படித்துறையில் யாரும் குளிக்கச் செல்ல முடியாத வண்ணம் தடுப்புகளும் அமைக்கப்பட்டு இருக்கிறது.