செய்தியாளர்: மருதுபாண்டி
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியைச் சேர்ந்த முருகன் மற்றும் கேடிசி நகர் பகுதியைச் சேர்ந்த சுடலை கண்ணு ஆகிய இருவரும் இன்று காலை திருநெல்வேலியில் இருந்து சென்னை செல்லும் வந்தே பாரத் ரயிலில் திருச்சிக்கு சென்றுள்ளனர்;. அப்போது ரயில்வே நிர்வாகம் சார்பாக சாம்பார் இட்லி வடை கொடுக்கப்பட்டுள்ளது,
இந்நிலையில், கொடுக்கப்பட்ட சாம்பாரில் சிறிய அளவில் 3 வண்டுகள் இருப்பதைக் கண்ட பயணி முருகன் அதிர்ச்சியடைந்து ரயில்வே அதிகாரிகளை அழைத்து புகார் அளித்துள்ளார், அதனை கண்ட அதிகாரிகள், இது வண்டு இல்லை எனவும் இது சீரகம் மசாலா எனவும் விளக்கம் அளித்துள்ளனர், அதற்கு சீரகம் மசாலாவில் எப்படி தலை மற்றும் கால்கள் இருக்கும் என பயணிகள் அதிகாரியிடம் கேள்வி கேட்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது,
ரயில் கட்டணம் மற்றும் உணவு கட்டணம் என ரூ.1040 வசூல் செய்யும் நிலையில், தரமான உணவுகளை ஒப்பந்ததாரர்கள் வழங்க வேண்டும். தரமான உணவுகளை வழங்காத ஒப்பந்த நிறுவனம் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் ரயில்வே அமைச்சகத்திற்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கு கோரிக்கை வைத்து வீடியோ வெளியிட்டுள்ளனர்.