தமிழ்நாடு

தேசிய கல்விக் கொள்கை,‘நெக்ஸ்ட்’க்கு எதிராக மனிதச் சங்கிலி போராட்டம்

தேசிய கல்விக் கொள்கை,‘நெக்ஸ்ட்’க்கு எதிராக மனிதச் சங்கிலி போராட்டம்

webteam

தேசிய கல்விக் கொள்கை, நெக்ஸ்ட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லையில் மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

நெல்லை பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மருத்துவர்கள் மற்றும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

தேசிய கல்விக் கொள்கை 2019-ஐ திரும்பப் பெற வேண்டும், தேசிய மருத்துவ ஆணைய மசோதாவிற்கு குடியரசு தலைவருடைய ஒப்புதலைப் பெறக் கூடாது, இந்திய மருத்துவக் கழகத்தை ஒழிக்க கூடாது, நெக்ஸ்ட் தேர்வை திணிக்கக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது. 

போராட்டத்தில், வரைவு தேசிய கல்விக் கொள்கை 2019ஐ திரும்பப் பெற வேண்டும், நவீன அறிவியல் மருத்துவப் படிப்பை படிக்காதோர் மருத்துவராக பணி செய்ய உரிமம் வழங்கக் கூடாது, மருத்துவக் கல்வியை கார்பரேட் வணிகமயமாக்கக் கூடாது மற்றும் மருத்துவக் கல்வியில் மாநில உரிமைகளை பறிக்கக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளும் வலியுறுத்தப்பட்டது.

மத்திய அரசை கண்டித்து நடைபெற்ற இந்த மனிதச் சங்கிலி போராட்டத்தில் தமிழ்நாடு மருத்துவ மாணவர் சங்கம், அரசு மருத்துவா்கள் சங்கம் மற்றும் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்டனா். தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் முழக்கங்கள் எழுப்பினர்.