தமிழ்நாடு

முன்னாள் மேயர் கொலை: கார்த்திக் ராஜூக்கு ஐந்து நாட்கள் சிபிசிஐடி காவல்

முன்னாள் மேயர் கொலை: கார்த்திக் ராஜூக்கு ஐந்து நாட்கள் சிபிசிஐடி காவல்

Rasus

நெல்லையில் முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உட்பட மூவர் கொலை வழக்கில் கைதான கார்த்திக்ராஜை,  5 நாட்கள் சிபிசிஐடி விசாரணைக்கு எடுக்க நெல்லை மாவட்ட நீதித்துறை நடுவர் மன்ற நீதிபதி பாபு உத்தரவிட்டார்.

கடந்த ஜுலை 23-ம் தேதி முன்னாள் திமுக மேயர் உமா மகேஸ்வரி உட்பட மூவர் படுகொலை செய்யப்பட்டனர். இவ்வழக்கில் 29-ம் தேதி இரவு கார்த்திக்ராஜை தனிப்படை போலீசார் பிடித்து விசாரித்தனர். அடுத்த நாள் இரவில் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி நிஷாந்தினி முன்பு கார்த்திக்ராஜ் ஆஜர்படுத்தப்பட்டார். இதனைத்தொடர்ந்து ஆகஸ்ட் 14 வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். 

இந்நிலையில் இவ்வழக்கு சிபிசிஐடி போலீசார் வசம் கடந்த ஜுலை மாதம் 29-ஆம் தேதி ஒப்படைக்கப்பட்டது. மூவர்  கொலைவழக்கில் கைதான கார்த்திக்ராஜை ஏழு நாளில் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார், நெல்லை மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனு செய்திருந்த நிலையில் வரும் வரும் 12-ஆம் தேதி வரை அதாவது ஐந்து நாட்கள் சிபிசிஐடி விசாரணைக்கு எடுக்க  நீதிபதி  உத்தரவிட்டுள்ளார்.