கால்நடை மருத்துவப் படிப்பு கலந்தாய்வில் கலந்துகொள்ள வந்த மாணவர்களும், அவர்களின் பெற்றோரும் கால்நடைத்துறை அமைச்சரை முற்றுகையிட்டனர்.
சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவ அறிவியல் கல்லூரியில் கால்நடை மருத்துவப்படிப்புக்கான கலந்தாய்வு இன்று நடைபெற்றது. இதற்கான பொது கலந்தாய்வில் கால்நடை துறை அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி கலந்துகொண்டார். முதல் 15 மாணவர்களுக்கு சேர்க்கை ஆணைகளை வழங்கிவிட்டு வெளியே வந்த அமைச்சரை வெளியில் கலந்தாய்விற்காக காத்திருந்த பெற்றோர்களும் மாணவர்களும் முற்றுகையிட்டனர்.
நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் 200-க்கு 199-க்கும் அதிக மதிப்பெண்கள் பெற்றும் நீட் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுக்க முடியாத காரணத்தால் கால்நடை படிப்பிற்கு வந்ததாக வேதனையுடன் தெரிவித்தனர். மத்திய அரசிடம் வலியுறுத்தி நீட் தேர்வில் இருந்து தமிழக அரசு விலக்கு பெற்றுத் தரும் என்ற நம்பிக்கையில் நீட் தேர்விற்கு தயாராக வில்லை எனவும் மாணவர்கள் தெரிவித்தனர்.