நீட் தேர்வு விவகாரம் நம் கைமீறி போய்விட்டது என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் ராஜூ " இந்த ஆட்சி தான் வேண்டும் என மக்களும், ஆளுங்கட்சியை பார்த்து எதிர்க்கட்சிகள் பயப்படும் அளவு ஆட்சியையும் கட்சியையும் நடத்தி வருகிறோம். மக்கள் எளிதாக அணுகக் கூடிய சாதாராண முதல்வராக இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. காங்கிரஸ் ஆட்சியில் கல்வியை மாநில பட்டியலில் கொண்டுவராமல் எங்கே போனார் ஸ்டாலின். இப்போது தும்பை விட்டு வாலை பிடிப்பது போல ஸ்டாலின் பேசுகிறார்" என்றார்.
மேலும் "நீட் பாதிப்புக்கு ப.சிதம்பரத்தின் மனைவி நளினி தான் காரணம். நீட் தேர்வு நம் கை மீறி போய்விட்டது. ஸ்டாலின் அரசியல் நாடகம் செய்கிறார்.
மக்கள் அதனை தெரிந்து கொள்வார்கள். வட மாநிலத்தொழிலாளர்கள் இல்லாததால் எந்தப்பணிகளும் நடைபெறவில்லை என கூற முடியாது. வடமாநிலத்தவர்கள் இல்லையென்றாலும் பணிகள் நடைபெற்று வருகிறது" என்றார் செல்லூர் ராஜூ.
இறுதியாக பேசிய அவர் "செய்தியாளர்களான நீங்கள் முகக்கவசம் அணிந்துள்ளீர்கள் நான் முக்கவசம் அணியவில்லை. தமிழகம் இயல்புநிலைக்கு திரும்புகிறது" எனவும் கூறினார்.