நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் மாணவர் உதித்சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. அதேசமயம் மாணவரின் தந்தை வெங்கடேசனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாணவர் உதித் சூர்யா மதுரை சிபிசிஐடி துணை கண்காணிப்பாளர் முன் தினமும் காலை 10.30 மணிக்கு ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையோடு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. மாணவரின் வயது, மனநிலையை கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்கப்படுவதாக நீதிபதி குறிப்பிட்டார். அதேபோல் வழக்கில் தொடர்புடையவர்களை அடையாளம் காணவேண்டியது அவசியம் என்பதால் மாணவரின் தந்தை வெங்கடேஷுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த வழக்கை பார்க்கும் போது வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்திலிருந்து திட்டம் கிடைத்துள்ளது போல் உள்ளது என நீதிபதி தெரிவித்தார்.