தமிழ்நாடு

நீட் ஆள்மாறாட்ட புகார் : உதய் சூர்யா குடும்பத்துடன் கைது?

நீட் ஆள்மாறாட்ட புகார் : உதய் சூர்யா குடும்பத்துடன் கைது?

rajakannan

நீட் ஆள்மாறாட்டம் செய்த புகாருக்கு ஆளான மாணவர் உதய் சூர்யா குடும்பத்துடன் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேனி மருத்துவக்கல்லூரியில் ஒருவர் மாணவராக சேர்ந்ததை புதிய தலைமுறை கள ஆய்வு செய்து வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது. இந்த விவகாரத்தில் மாணவர் உதித் சூர்யா உள்ளிட்ட இருவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து உதித் சூர்யா தரப்பில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த முன்ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்படுள்ளது. தனிப்படை போலீசார் இந்த விவகாரத்தில் விசாணை நடத்தி வந்த நிலையில், சமீபத்தில் சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டது. 

இந்நிலையில், நீட் ஆள்மாறாட்டம் செய்த புகாருக்கு ஆளான மாணவர் உதய் சூர்யா குடும்பத்துடன் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திருப்பதி மலை அடிவாரத்தில் உதித் சூர்யா மற்றும் அவரது குடும்பத்தினரை சிபிசிஐடி போலீசார் சுற்றி வளைத்தனர். பின்னர், அவர்களை தேனிக்கு அழைத்துச் செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், இது கைது நடவடிக்கையா என்பது குறித்து போலீசார் தகவல் எதுவும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை. விசாரணைக்கு ஆஜராகுமாறு நேரில் சம்மன் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

உதித்சூர்யாவின் முன்ஜாமீன் விசாரணையின்போது, அவரை சிபிசிஐடி முன் ஆஜராக நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.