தமிழ்நாடு

தமிழகத்துக்கு நீட் தேர்வு இருக்காது: சட்டமன்றத்தில் மசோதா தாக்கல்

தமிழகத்துக்கு நீட் தேர்வு இருக்காது: சட்டமன்றத்தில் மசோதா தாக்கல்

webteam

மருத்துவப் படிப்புக்கு தேசிய பொது நுழைவுத் தேர்வின்றி 12ஆம் வகுப்பு கட்ஆஃப் மார்க் அடிப்படையில் மாணவர் தேர்வு செய்ய வகை செய்யும் மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.

மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில் நாடு முழுவதும் ஒரே நுழைவுத் தேர்வாக ‘நீட்’ பொது நுழைவுத் தேர்வு நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நீட் தேர்வால் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்களிக்க வேண்டும் என்று பல தரப்பினர் கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில் மருத்துவ படிப்ப‌களுக்கான நாடு தழுவிய பொது நுழைவுத் தேர்வான நீட்டில் இருந்து தமிழகத்திற்கு விலக்களிக்கும் மசோதாவை சட்டப்பேரவையில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தாக்கல் செய்தார். நீட் தேர்வு முறை கிராமப்புற மாணவர்களை கடுமையாக பாதிக்கும் என்பதால் தமிழக அரசால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த சட்ட மசோதா நீட் தேர்வின்றி பழைய முறையையே பின்பற்றி 12ஆம் வகுப்பு கட்ஆஃப் மார்க் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை நடத்த வகை செய்கிறது.