நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள் அவரவர் பயின்ற பள்ளிகள் வாயிலாக விண்ணப்பிக்க பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி தலைமையாசிரியர்கள் நீட் தேர்வு எழுத விரும்பும் மாணவர்களை ஒருங்கிணைத்து தத்தமது பள்ளிகள் வாயிலாக விண்ணப்பிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. நீட் தேர்வு எழுத விரும்பும் மாணவர்களை நீட் தேர்வுக்கு விண்ணப்பங்களை அனுப்புவதற்கான பணிகள் வரும் ஆகஸ்ட் 6ஆம் தேதிக்குள் முடிக்கப்பட வேண்டும் என்றும் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நீட் தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் நடைமுறை கடந்த 16ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. மருத்துவ மேல்படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு நாடெங்கும் வரும் செப்டம்பர் 21ஆம் தேதி நடைபெறுகிறது. இத்தேர்வு தமிழ்நாட்டில் 18 நகரங்களில் நடைபெற உள்ளது