தமிழ்நாடு அரசின் பல்வேறு திட்டங்கள் மூலம் பயன் பெற்றவர்கள், கோரிக்கை மனு அளித்து அதன் மூலம் பலன்பெற்றவர்கள், காத்திருப்பவர்கள் என அனைவரையும் உணர்ச்சிப் பூர்வமாக அணுகுவதே ‘நீங்கள் நலமா?’ திட்டம்.
முதலமைச்சர், அமைச்சர்கள், அரசுத்துறைகளின் செயலாளர்கள், மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை கண்காணிப்பாளர்கள் உள்ளிட்டோர் மாதந்தோறும் இலக்கு நிர்ணயித்து தங்கள் துறைகளில் பயன்பெற்றவர்களிடம் நலம் விசாரிக்க வேண்டும்.
இதன்மூலம் கோரிக்கை தொடர்பாக மக்கள் சந்திக்கும் சிரமங்கள் நேரடியாக அந்தந்த துறைத்தலைவர்களின் கவனத்திற்கு வரும். இந்த திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச் 6, 2024) தொடங்கி வைக்கிறார்.
“மக்களை நோக்கி இனி அரசு வரும்... மக்களின் நலனை அறிய அரசு காது கொடுக்கும்...” என்ற முழக்கத்தை பிரதானமாக வைத்து இந்த திட்டம் தொடங்கப்படவுள்ளது.