நயினார் நாகேந்திரன், விஜய் pt web
தமிழ்நாடு

"விஜய் நல்லபடியாக மக்களுக்கு சேவை செய்ய வேண்டும்"- நயினார் நாகேந்திரன் கருத்து

தமிழக முன்னேற்ற கழகம் குறித்து பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் புதிய தலைமுறையிடம் பிரத்யேகமாக பேசிய கருத்துக்கள்....

Angeshwar G

தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை இன்று தொடங்கி இருக்கிறார் நடிகர் விஜய். “அரசியல் என்பது புனிதமான பணி; தொழில் அல்ல. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை. நாடாளுமன்றத் தேர்தலில் யாருக்கும் ஆதரவும் இல்லை” என அறிவித்து இருக்கிறார் அவர்.

அரசியல் சீர்திருத்தங்களை கொண்டுவர அரசியல் அதிகாரம் தேவைப்படுகிறது - தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்

தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் கிடைத்த பின்பு கட்சியின் கொள்கை, கொடி, சின்னம் உள்ளிட்டவை வெளிப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவற்றை விஜய்யே அறிவிப்பார் என விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் விஜய்யின் அரசியல் கட்சி குறித்து பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் புதிய தலைமுறையிடம் பிரத்யேகமாக தெரிவித்த கருத்துகள், “இந்தியாவில் அனைத்துவிதமான சுதந்திரமும் உள்ளது. இளைஞர்கள் கட்சி ஆரம்பித்து மக்களுக்கு நல்லது செய்ய வருகிறதை நான் வரவேற்கிறேன். அவர் நல்லபடியாக மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பது தான் என் நோக்கம்., அவர் யாரை எதிர்த்து அரசியல் செய்யப்போகிறார் என்பதெல்லாம் இரண்டாம்பட்சம். ஆனால் எந்தெந்த தொகுதிகளில் யார் யாரை வேட்பாளர்களாக நியமிக்கிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும்.

இந்தியாவைப் பொறுத்தவரை பிரதமர் நரேந்திர மோடி, தனிப்பட்ட மனிதன் எனும் முறையில் மட்டுமல்லாமல் நாட்டு மக்களின் நலன் கருதி 10 வருடங்களாக உழைத்துக் கொண்டிருக்கிறார். அதேமாதிரியான ஒரு ஆட்சிதான் தமிழகத்தில் வரவேண்டும் என்பதுதான் பாஜகவின் நோக்கம். இந்தியா முழுவதும் நாங்கள் ஆட்சி தந்துள்ளோம். அதே ஆட்சி தமிழகத்தில் தொடர தமிழக மக்கள் ஆதரவு கொடுப்பார்கள் என நம்புகிறோம்” என தெரிவித்துள்ளார்.