தமிழ்நாடு

ஜாமீன் கோரி நாதுராம் உள்ளிட்டோர் மனு

ஜாமீன் கோரி நாதுராம் உள்ளிட்டோர் மனு

rajakannan

சென்னை கொளத்தூர் நகைக்கடை கொள்ளை சம்பவத்தின் முக்கிய குற்றவாளியான நாதுராம் ஜாமீன் கோரி எழும்பூர் நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்.

நகைக்கடை கொள்ளை மற்றும் ஆய்வாளர் பெரியபாண்டி கொலை சம்பவம் தொடர்பான வழக்குகளில், தலைமறைவாக இருந்தக் கொள்ளையன் நாதுராமை குஜராத்தில் வைத்து ராஜஸ்தான் காவல்துறையினர் கைது செய்தனர். தமிழகம் கொண்டுவரப்பட்டுள்ள நாதுராம், தினேஷ், பக்தா ராம் ஆகிய மூவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றனர். சிறையில் உள்ள கொள்ளையர்கள் மூவரையும் காவலில் எடுத்து விசாரணை செய்ய ராஜமங்கலம் காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர். இது தொடர்பாக நீதிமன்றத்தில் மனு கொடுத்து இருந்தனர்.

இந்நிலையில், நாளை நாதுராம் உள்ளிட்ட மூன்று கொள்ளையர்களும் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, காவல்துறையினரின் கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம், நாதுராம் மற்றும் அவரது கூட்டாளிகள் தினேஷ், பக்தாராம் ஆகியோரை 10 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி அளித்தது.

10 நாள் போலீஸ் காவல் வழங்கப்பட்ட நிலையில், நாதுராம் உள்ளிட்ட 3 பேர் ஜாமீன் கோரி சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை வெள்ளிக்கிழமை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, கொளத்தூர் நகைக்கடை கொள்ளை வழக்கில் கைதான நாதுராமின் தந்தை உட்பட 4 பேருக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.