தமிழ்நாடு

37 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் குலசேகரமுடையார் கோயிலில் நடராஜர் சிலை..!

37 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் குலசேகரமுடையார் கோயிலில் நடராஜர் சிலை..!

Rasus

ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்ட நடராஜர் சிலை நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி குலசேகரமுடையார் கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது.

நடராஜர் சிலை 1982-ஆம் ஆண்டு திருடப்பட்டு ஆஸ்திரேலியாவுக்கு கடத்தப்பட்டது. சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் தலைமையிலான சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு அதிகாரிகள் ஆஸ்திரேலியா சென்று நடராஜர் சிலையை மீட்டு வந்தனர். இதனையடுத்து 37 ஆண்டுகளுக்குப் பின் நடராஜர் சிலை கல்லிடைக்குறிச்சி குலசேகரமுடையார் உடனுறை அறம் வளர்த்த நாயகி கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது.

மலர்த் தூவியும், இசைக்கருவிகள் முழங்கவும் நடராஜருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 30 கோடி ரூபாய் மதிப்புள்ள நடராஜர் சிலைக்கு 24 மணி நேரமும் காவல்துறை பாதுகாப்பு வழங்கப்படவுள்ளது