தமிழ்நாடு

ஆர்.கே.நகர் தேர்தல்: நஜீம் ஜைதி ஆலோசனை

ஆர்.கே.நகர் தேர்தல்: நஜீம் ஜைதி ஆலோசனை

Rasus

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் புகார்கள் தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர் நசீம் ஜைதி தலைமை செயலர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் வீடியோ கான்பிரன்சிங் மூலம் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார்.

தமிழக தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன், டிஜிபி டி.கே.ராஜேந்திரன், காவல் ஆணையர் கரண் சின்கா ஆகியோருடன் டெல்லியில் இருந்தப்படி காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார் தலைமை தேர்தல் அதிகாரி நஜீம் ஜைதி. இந்த ஆலோசனையில் பணப்பட்டுவாடா, போலி வாக்காளர்கள் உள்ளிட்ட பல புகார்கள் குறித்து தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லகானியிடம் கருத்துக் கேட்கப்பட்டுள்ளது.

வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக திமுக மற்றும் அதிமுக புரட்சி தலைவி அம்மா அணியினர் அதிமுக அம்மா அணியின் வேட்பாளரான டிடிவி தினகரன் மீது குற்றம் சாட்டி வந்தனர். இதையடுத்து, டிடிவி தினகரன் திமுக கட்சியினர் தங்களது சின்னமான தொப்பியை அணிந்து வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக குற்றம் சாட்டினார். மேலும், டிடிவி தினகரனின் ஆதரவு எம்.பி. தம்பிதுரை திமுக தான் பணம் கொடுப்பதாக புகார் கூறினார். பணப்பட்டுவாடா போன்ற புகார்கள் மூலம் தேர்தலை நிறுத்த சதி செய்வதாகவும் ஒபிஎஸ் அணி மீது தினகரன் அணி குற்றம்சாட்டியது. இந்த நிலையில் நஜீம் ஜைதி ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் புகார்கள் குறித்து ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.