நாராயணன் திருப்பதி குற்றச்சாட்டு pt desk
தமிழ்நாடு

திருப்பூர்: “மகா விஷ்ணுவை கைது செய்தது கேவலமான செயல்” - பாஜக நாராயணன் திருப்பதி குற்றச்சாட்டு

“மகா விஷ்ணுவை கைது செய்தது கேவலமான செயல். அரசுப் பள்ளிகளில் தொடரும் சர்ச்சைகளுக்கு பொறுப்பேற்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஸ் ராஜினாமா செய்ய வேண்டும்” என்று பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்தார்

webteam

செய்தியாளர்: சுரேஷ்குமார்

திருப்பூர் பாளையக்காடு பகுதியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அன்னதான விழா நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கலந்து கொண்டார். இதைத் தொடர்ந்து செய்தியாளரை சந்தித்த அவர் பேசுகையில்... “மகா விஷ்ணுவை 200 போலீசார் சென்று கைது செய்வதன் அவசியம் என்ன?. இது ஒரு கேவலமான செயல்.

மகா விஷ்ணு

தொடர்ந்த அரசுப் பள்ளியில் நடைபெறும் சர்ச்சைகளுக்கு பொறுப்பேற்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஸ் ராஜினாமா செய்ய வேண்டும். கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய மதங்களில் மறு ஜென்மம் குறித்த தகவல்கள் இருந்திருந்தால் இவர்கள் எதிர்ப்பு தெரிவித்து இருப்பார்களா? இவர்கள்தான் மதவாதிகள்.

பங்களாதேஷில் இவ்வளவு பெரிய பிரச்னை நடந்து கொண்டிருக்கும் போது, திருப்பூருக்கு பெரும்பாலான தொழில் வாய்ப்புகள் வந்திருக்கக் கூடிய வாய்ப்புகள் இருந்த நிலையில், தமிழக அரசு நடவடிக்கை எடுக்க தவறிவிட்டது” என குற்றம் சாட்டினார்.