சென்னை பட்டினப்பாக்கம் அருகே தனியார் உணவகத்திற்கு சென்ற நாஞ்சில் சம்பத்தை, பாரதிய ஜனதா கட்சியினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பிரதமர் மோடி, தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோரை அவதூறாக பேசியதாக கூறி, நாஞ்சில் சம்பத்தின் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் நடத்திய பாரதிய ஜனதா கட்சியினர், அவரது உருவ பொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து ஸ்ரீதர் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள உணவகத்திற்கு சென்ற நாஞ்சில் சம்பத்தை பாரதிய ஜனதா தொண்டர்கள் முற்றுகையிட்டனர். அவரது காரும் சேதப்படுத்தப்பட்டதால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது. இதனிடையே சுமார் 2 மணி நேரம் கழித்து அங்கு சென்ற புகழேந்தி மற்றும் தொண்டர்கள் நாஞ்சில் சம்பத்தை பத்திரமாக அழைத்துச் சென்றனர். நாஞ்சில் சம்பத் மீது கொலை முயற்சியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக அம்மா அணியின் கர்நாடக மாநில செயலாளர் புகழேந்தி வலியுறுத்தியுள்ளார்.
இதனையடுத்து பட்டினம்பாக்கம் காவல்நிலையத்தில் அவர் மீது புகார் கொடுத்ததை அடுத்து நாஞ்சில் சம்பத் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.