ராசிபுரம் அருகே திருமணிமுத்தாறு நீரில் ரசாயனக் கலவையால் நுரைப் பெருக்கெடுத்துள்ளது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் பெய்து வரும் மழையால், திருமணிமுத்தாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில் மதியம்பட்டி கிராமப் பகுதியில் ஓடும் ஆற்றுநீரில் நேற்றிரவு சில விஷமிகள் ரசாயனத்தைக் கலந்ததாக அப்பகுதி மக்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர். இதனால் ஏற்பட்டுள்ள அதிகப்படியான நுரையால், மல்லசமுத்திரம்-மதியம்பட்டி சாலையில் வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு பயணிகள் சிரமப்பட்டு வருகின்றனர். அத்துடன் ரசாயணத்தை ஆற்றில் கலந்தவர்களை காவல்துறையினர் கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.