நாமக்கல் மண்டலத்தில் மீண்டும் உயர்ந்த முட்டை விலை, 25 காசுகள் விலை உயர்ந்து 4 ரூபாய் 15 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக கோழிப் பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலையை 3 ரூபாய் 90 காசுகளிருந்து ஒரே நாளில் 25 காசுகள் விலை உயர்த்தி 4 ரூபாய் 15 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது.
நாமக்கல் மண்டலத்தில் கடந்த 9ஆம்; தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 60 காசுகளாக இருந்த நிலையில், கடந்த 9ஆமு தேதி 5 காசுகளும் 12 ஆம் தேதி 25 காசுகளும் விலை உயர்ந்து 3 ரூபாய் 90 காசுகளாக விற்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், இன்று ஒரே நாளில் மீண்டும் 25 காசுகள் விலையை உயர்த்தி 4 ரூபாய் 15 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. 3 நாட்களில் 50 காசுகள் விலை உயர்வு குறித்து கோழி பண்ணையாளர்கள் கூறும்போது...
வட மாநிலங்களில் முட்டை விற்பனை தொடர்ந்து அதிகரித்து விலையும் வேகமாக உயர்ந்து வரும் நிலையில், தமிழகத்தில் மீன்பிடித் தடை காலம் அமலில் உள்ளதால் முட்டை விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருவதால் விலை உயர்ந்துள்ளது. வரும் நாட்களில் விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக கோழிப் பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.