தமிழ்நாடு

தேவை அதிகரிப்பால் படிப்படியாக உயரும் முட்டை விலை!

தேவை அதிகரிப்பால் படிப்படியாக உயரும் முட்டை விலை!

kaleelrahman

நாமக்கல் மண்டலத்தில் தொடர்ந்து உயரும் முட்டை விலை, இன்றும் 10 காசுகள் விலை உயர்ந்து 4 ரூபாய் 05 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக கோழிப் பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நாமக்கல் மண்டலத்தில் கடந்த 9-ம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 60 காசுகளில் இருந்து 10,12,14,17,19 ஆகிய தேதிகளில் தலா 5 காசுகளும், 21-ம் தேதி 10 காசு வீதம் உயர்த்தப்பட்டு 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்று மீண்டும் 10 காசுகள் விலை உயர்ந்து பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 05 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 14 நாட்களில் முட்டை பண்ணை கொள்முதல் விலை 45 காசுகள் விலை உயர்வு குறித்து கோழி பண்ணையாளர்கள் கூறும்போது வட மாநிலங்களில் முட்டை விலை உயர்ந்து வருகிறது.

இதைத் தொடர்ந்து தமிழகம், கேரளாவில் மந்தமாக இருந்த முட்டை விற்பனையும் அதிகரித்து முட்டை தேவையும் அதிகரித்துள்ளதால் விலை உயர்த்தப் படுவதாகவும், வரும் நாட்களில் விலை மேலும் உயர்வற்கான வாய்ப்புகளே உள்ளதாகவும் கோழிப் பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.