முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று கடந்த 28 ஆண்டுகளுக்கு மேலாக தொரப்பாடியில் உள்ள வேலூர் பெண்கள் தனிச்சிறையில் தண்டனை அனுபவித்து வரும் நளினி சிறையில் சக கைதியுடன் ஏற்பட்ட வாக்கு வாதத்தினாலும், பெண் சிறை காவலர்களுடன் ஏற்பட்ட வாக்கு வாதத்தினாலும் துணியால் தனது கழுத்தை நெரித்து தற்கொலைக்கு முயன்றார்.
"நளினியின் தற்கொலை முயற்சியை விரைவாக சிறை காவலர்கள் தடுத்ததால் எந்த வித அசம்பாவிதமும் இன்றி பத்திரமாக உள்ளார்" என அவரது வழக்கறிஞர் புகழேந்தி கூறினார்.
இந்நிலையில், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் 'நளினியின் கழுத்து பகுதியில் காயம் எதுவும் இல்லை. அவரது உடல் நிலையும் சீராக உள்ளது' என மருத்துவ சான்று கொடுத்துள்ளனர். நளினியின் தாயார் பத்மா 'எனது மகளை புழல் சிறைக்கு மாற்றுமாறு கேட்டு கொள்கிறேன்' என தமிழக தலைமை செயலாளர் மற்றும் சிறை துறை டிஜிபி மற்றும் ஐஜி, வேலூர் மத்திய சிறை கண்காணிப்பாளருக்கும் கோரிக்கை கடிதம் அனுப்பியுள்ளார்.