தமிழ்நாடு

ஆகம விதிப்படி அர்ச்சகர்கள் உள்ள 4000 கோயில்களில் தலையிடாதீர்: பேரவையில் பாஜக கோரிக்கை

ஆகம விதிப்படி அர்ச்சகர்கள் உள்ள 4000 கோயில்களில் தலையிடாதீர்: பேரவையில் பாஜக கோரிக்கை

Sinekadhara

ஆகம விதிப்படி அர்ச்சகர்கள் உள்ள 4000 கோயில்களில் தமிழ்நாடு அரசு தலையிட வேண்டாம் என பாஜக வலியுறுத்தியுள்ளது.

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் திட்டம் விரிவுபடுத்தப்படும் என்றும், தமிழ்நாட்டில் அனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியிருந்தது.

இந்நிலையில், இன்று தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடந்த விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன், "ஆகம விதிப்படி அர்ச்சகர்கள் உள்ள 4000 கோயில்களில் தமிழ்நாடு அரசு தலையிட வேண்டாம். தமிழ்நாட்டில் 4000 கோயில்களில் எல்லா சாதியினரும் இருக்கிறார்கள்" என்றார்.