மீனவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு pt desk
தமிழ்நாடு

நாகை: கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த அக்கரைப்பேட்டை மீனவர் படகிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

PT WEB

செய்தியாளர்: என்.விஷ்ணுவர்த்தன்

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்பதால் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் மீனவர்கள் வரும் 23ஆம் தேதிக்குள் கரை திரும்ப வேண்டும், கரையில் இருக்கும் மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குச் செல்லக்கூடாது என மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Death

இந்நிலையில் மீன்வளத் துறையினரின் எச்சரிக்கைக்கு முன்பாகவே அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த அழகிரிசாமி என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் 10 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். நேற்று கோடியக்கரை அருகே 20 நாட்கள் மைல் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது அக்கரைப்பேட்டை டாடா நகரைச் சேர்ந்த மீனவர் பால்ராஜ் படகிலேயே மயங்கி விழுந்துள்ளார்.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சக மீனவர்கள், பால்ராஜை மீட்டு உடனடியாக கரை திரும்பி ஒரத்தூர் மருத்துவக்கல்லூரிக்கு அவசர கால ஊர்தி மூலம் கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து கடற்கரை காவல் நிலைய போலீசார், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.