தமிழ்நாடு

நாகை: ரெட் வைரஸ் நோயால் பாதிக்கப்பட்ட வனாமி இறால்கள் - வேதனையில் உற்பத்தியாளர்கள்

நாகை: ரெட் வைரஸ் நோயால் பாதிக்கப்பட்ட வனாமி இறால்கள் - வேதனையில் உற்பத்தியாளர்கள்

Sinekadhara

நாகை மாவட்டத்தில் ஏற்றுமதிக்காக வளர்க்கப்படும் வனாமி இறால்கள், ரெட் வைரஸ் நோய் பாதிப்பால் உரிய வளர்ச்சியடையாமல் இருப்பதாகவும் இதனால் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் உற்பத்தியாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

வேதாரண்யம், புஷ்பவனம் உள்ளிட்ட பகுதிகளில், 300க்கும் அதிகமான ஏக்கரில் 'வனாமி' எனப்படும் இறால்கள் வளர்க்கப்படுகின்றன. 120 நாள்களுக்கு வளர்க்கப்படும் இவை, அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன. இவை தற்போது 'ரெட் வைரஸ்' பாதிப்பால் உரிய வளர்ச்சியடையாததோடு, அதிக அளவில் இறந்துவிட்டதாக உற்பத்தியாளர்கள் கண்ணீருடன் தெரிவிக்கின்றனர்.

இதனால், பெரும் இழப்பை சந்தித்துள்ளதாகவும் கூறும் அவர்கள், வனாமி இறால்களை ரெட் வைரஸ் தாக்குதலிலிருந்து பாதுகாக்க மீன்வளத் துறையினர் உரிய ஆலோசனை வழங்குமாறு கோரியுள்ளனர். மேலும் வனாமி இறால் பண்ணையாளர்களுக்கு நிவாரணம் வழங்குமாறும் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.