தமிழ்நாடு

11 நாளாக மீன்பிடிக்கச் செல்லாத மீனவர்கள்

11 நாளாக மீன்பிடிக்கச் செல்லாத மீனவர்கள்

webteam

கடல் சீற்றம், புயல் காரணமாக 11 நாட்களாக மீன்பிடிக்கச் செல்லாமல் ஒரு லட்சம் மீனவர்கள் தவித்து வருகின்றனர்.

கடல்சீற்றம் மற்றும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக 11ஆவது நாளாக நாகை மாவட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீனவர்களை மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. 

எனவே, மாவட்டத்திலுள்ள 54 மீனவ கிராமங்களைச் சேர்ந்த ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மற்றும் மீன்பிடி சார்பு தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நாளொன்றுக்கு பலகோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர். இப்பகுதியில் ஆயிரத்து 500 விசைப் படகுகளும், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகுகளும் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.