தமிழ்நாடு

உலக மீனவர் தினத்தை புறக்கணித்த மீனவர்கள்

உலக மீனவர் தினத்தை புறக்கணித்த மீனவர்கள்

webteam

நாகை மாவட்டத்தில் உள்ள மீனவர்கள் உலக மீனவர் தினத்தை புறக்கணித்தனர்.

மீனவர்கள் உழைப்பை போற்றும் வகையில் இன்று உலக மீனவர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. ஆனால் நாகை மீனவர்கள் மீனவர் தினத்தைப் புறக்கணித்தனர்.

வேதாரண்யம் அருகே கோடியக்கரையில் தரங்கம்பாடி, பெருமாள்பேட்டை, புதுப்பேட்டை, அக்கடைப்பேட்டை, செருதூர் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் குடும்பத்துடன் தங்கி மீன்பிடித்து வருகின்றனர். இவர்கள், இலங்கை கடற்படையினரின் தாக்குதல் இல்லாமல், இலங்கை கடற்கொள்ளையர்களின் இடையூறு இல்லாமல் எப்போது நாங்கள் சுதந்திரமாக நமது கடற்பகுதியில் மீன்பிடித்து கரை திரும்புகிறோமோ அன்றுதான் எங்களுக்கு மகிழ்ச்சியான நாள் அதுவே எங்களுக்கு மீனவர் தினம் எனக்கூறி இந்த தினத்தை புறக்கணித்துள்ளனர்.