நாகையில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த எதிர்ப்பு தெரிவித்து வயலில் கறுப்புக் கொடி ஏற்றி போராட்டம் நடைபெற்று வருகிறது.
காரைக்கால் எண்ணெய் எடுப்புத் திட்டம் என்ற பெயரில் நாகை மாவட்டத்தில் ஓ.என்.ஜி.சி வசமுள்ள பகுதிகளில் ஹைட்ரோகார்பன் வாயு எடுக்கும் திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு முயற்சித்து வருவதாக பொதுமக்கள் கூறுகின்றனர். இதற்கான ஒப்பந்தம் இரு தினங்களுக்கு முன் கையெழுத்தான சூழலில், திட்டத்தை எதிர்த்து திருக்குவளை அருகேயுள்ள மீனம்பநல்லூரில் விவசாயிகளும், பொதுமக்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
வயல்வெளிகளில் இன்று கறுப்புக்கொடிகளை ஏற்றியுள்ள அவர்கள், ஹைட்ரோகார்பன் திட்டத்தை கைவிட வலியுறுத்தி முழக்கமிட்டனர்