நாம் தமிழர் கட்சி முகநூல்
தமிழ்நாடு

மீண்டும் நாம் தமிழர் கட்சிக்கு வந்த சோதனை! தேர்தல் சின்னத்தில் எழுந்த புதிய பிரச்னை!

ஸ்விட்ச் இல்லாத மைக் சின்னத்தை தங்களுக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கிய நிலையில், தற்போது ஸ்விட்ச் இருக்கும் மைக் சின்னத்தை வாக்குபதிவு எந்திரங்களில் ஒட்டப்பட்டுள்ளது என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சிமான் புகார் அளித்துள்ளார்.

ஜெனிட்டா ரோஸ்லின்

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் களம் சூடுப்பிடித்துள்ள நிலையில், அரசியல் தலைவர்கள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் அடிப்படையில், வாக்குப்பதிவு எந்திரங்களில் கட்சி சின்னம் , வேட்பாளர்களின் புகைப்படம், பெயர்கள் ஒட்டும் பணிகள்தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.

இந்நிலையில், ஸ்விட்ச் இல்லாத மைக் சின்னத்தை தங்களுக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கிய நிலையில், தற்போது ஸ்விட்ச் இருக்கும் மைக் சின்னம் வாக்குபதிவு எந்திரங்களில் ஒட்டப்பட்டுள்ளது என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சிமான் புகார் அளித்துள்ளார்.

மக்களவை தேர்தலுக்கான பணிகள் துவங்கியதில் இருந்தே, நாம் தமிழர் கட்சியினர் பெரும் சவால்களை சந்தித்து வருகின்றனர். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உட்பட 40 மக்களவை தொகுதியிலும் மைக் சின்னத்தில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியானது ஆரம்பத்தில் கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட போராடிய நிலையில் பல்வேறு கெடுப்பிடிகளுக்கு மத்தியில்தான் தற்போது கரும்பு விவசாயி சின்னமும் கிடைக்காமல் மைக் சின்னத்தில் போட்டியிட தேர்தல் ஆணையத்தால் உறுதி செய்யப்பட்டுள்ளது.

20 பெண் வேட்பாளர்கள், 20 ஆண் வேட்பாளர்கள் என மைக் சின்னத்தை கொண்டு தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வரும் நிலையில், வாக்கு இயந்திரத்தில் ஒட்டப்பட்டுள்ள நாம் தமிழரின் தேர்தல் சின்னமான ஸ்விட்ஸ் இல்லாத மைக் சின்னத்திற்கு பதில் ஸ்விட்ஸ் உள்ள மைக் சின்னம் ஒட்டப்பட்டுள்ளது என தலைமை தேர்தல் அதிகாரியிடம் நாதகவினர் புகார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், தற்போதைய பிரச்னையாக நாம் தமிழர் கட்சியினருக்கு மைக் பிரச்னை உருவெடுத்துள்ளது.