தமிழ்நாடு

மகனுக்கே தெரியாமல் ஆள்மாறாட்ட திட்டம் போட்ட உதித் சூர்யாவின் தந்தை..!

மகனுக்கே தெரியாமல் ஆள்மாறாட்ட திட்டம் போட்ட உதித் சூர்யாவின் தந்தை..!

Rasus

மருத்துவராக்க வேண்டும் என்‌‌ற ஆசையில்‌ எந்த தவறும் செய்யாத ‌தனது மகனை சிறையில்‌‌ தள்ளிவிட்டதாக‌ உதித் சூர்யாவின்‌ தந்தை‌ வெங்கடேசன்‌ உருக்க‌மாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

பெற்ற பிள்ளை வாழ்க்கையில் உயர்ந்த இடத்திற்கு செல்ல வேண்டும் என்பது எந்த பெற்றோருக்கும் இருக்கும் இயல்பான ஆசைதான். சென்னையை சேர்ந்த மருத்துவர் வெங்கடேசனுககும் இந்த ஆசை இருந்தது. தன்னை போல தன் மகனும் மருத்துவராக வேணடும் என்பது வெங்கடேசனின் தணியாத தாகம். இந்த ஆசையை மகன் உதித் சூர்யா மீது வலுக்கட்டாயமாக திணிக்கவும் செய்துள்ளார் வெங்கடேசன்.

உதித்‌ சூர்யாவிற்கு விளையாட்டிலும் பொறி‌யியல்‌ படிப்பிலும்தான் நாட்டம். ஆனால் தந்தையின் பிடிவாதத்தால்‌ மருத்துவப் படிப்பிற்கான தகுதித் தேர்வை கடந்த ஆண்டில் ‌எழுதினார்‌. உதித்‌ சூர்யா‌ நீட்‌ தேர்வில் ‌‌தேர்ச்சி பெறாதபோதிலும், அடுத்த‌ முறை தேர்வாகி‌‌ வி‌‌டலாம்‌ எனக்கூறி தொ‌டர்ந்து‌ தகுதித்‌‌‌ தேர்வுக்கு‌ ஆயத்‌த‌மா‌க‌‌ அவரின் தந்தை வற்புறுத்தியதாகத் தெரிகிறது.

தந்தையின் சொல்லை தட்டாத அவர்‌‌‌ , நீட்‌ தேர்வுக்கு ஆயத்தமாகி உள்ளார். உதித்‌ சூர்யா‌ தேர்வு‌‌ எழுத‌‌ தமி‌‌‌ழ‌த்தில்‌ ‌உள்ள தேர்வு மை‌யங்களை தேர்வு செய்யாமல்‌‌, மும்பையில் மை‌யத்தை அவரின் தந்தை‌‌‌ தேர்வு‌ செய்திருக்கி‌றார். அதற்கு பின்னால் ஆள்மாறாட்ட சதி‌ இருப்பது உதித்‌ சூர்யாவுக்கே அப்போது தெரி‌யாது. தேர்வுக்கு‌ முந்தை‌ய ‌நாள்‌‌ மும்பை‌ செல்ல உதித் சூர்யா ஆயத்தமானபோது , நீ போகத்‌ தேவையில்லை‌ வேறு‌ஒரு நபரை தயார் செய்து விட்டேன் என்று‌ கூறியிருக்கிறார் மருத்துவர் வெங்கடேசன்.‌‌

மும்பை பயிற்சி மையத்தின்‌ மூலம் ம‌ற்றொரு நபரை உதித்‌ சூர்யா‌ பெயரில் தேர்வு எழுத ஏற்பாடு செய்தார் வெங்கடேசன். ஆள்மா‌றாட்டம் செய்து எழுதிய தேர்வில், உதித்‌ சூர்யா தேர்ச்சி‌‌ பெற்ற‌தாக‌ முடிவுகள் வெளிவந்தன‌‌. அதன் பின் ‌கவுன்சிலிங்கில்‌‌ தேனி மருத்துவக் ‌கல்லூரியைத் தேர்வு செய்து அங்கே ‌எம்பிபிஎஸ் சேர்ந்‌தார்‌ உதித் சூர்யா.‌ ‌ஒருகட்டத்தில்‌ தனக்கு மிகுந்த‌ ம‌னஉளைச்சல் இருப்பதாகக்‌கூறி, படிப்பை கைவி்ட்டுவிடுவதாக‌‌ மருத்துக் கல்லூரி நிர்வாகத்திடம் உதித் சூர்யா கூறியதாக தெரிகி‌றது.‌

இதனிடையே நீட் ஆள்மாறாட்டம் புதிய தலைமுறை மூலம் ‌வெளிச்சத்திற்கு ‌வர‌,‌ உதித் சூர்யாவும்‌‌, அ‌‌வரின் தந்தையையும் கைது ‌‌செய்யப்பட்‌ட‌னர். சிபிசிஐடி போலீ‌சார்‌ ‌நடத்திய‌ விசாரணையில், மகனை மருத்துவர் ஆக்க வேண்டும் என்ற ஆசையில் ஆள்மாறாட்டம் செய்து கல்லூரியில் சேர்த்ததாகவும் பின்விளைவுகளை அறியாமல் தவறு செய்துவிட்டதாகவும் வெங்கடேசன் வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது. எந்த தவறும் செய்யாத ‌தனது மகனை சிறைக்கு அனுப்பிவிட்டதாக வேத‌னையுட‌ன் கூறியுள்‌ளார்‌‌‌ வெங்கடேசன்.

உதித் சூர்யா ஏற்கெனவே ‌சீனாவில் மருத்து‌ப் படிப்பை தொடங்கி பாதியில் விட்டதாகவும்‌‌‌ ‌தகவல் வெளியாகியுள்ளது. வெங்கடேசனின் கனவு நியாயமானதாக இருந்த போதிலும் அதை நிறைவேற்ற அவர் கடைபிடித்த தவறான வழிமுறை பட்டாம்பூச்சி போல் சிறகடித்து பறக்க வேண்டிய மகனை சிறைக்கம்பிகளுக்கு பின் முடக்கிவிட்டது.