தமிழ்நாடு

”என் தந்தையின் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் என் மீது ரெய்டு” - கார்த்தி சிதம்பரம்

”என் தந்தையின் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் என் மீது ரெய்டு” - கார்த்தி சிதம்பரம்

kaleelrahman

’என் தந்தையின் கேள்விக்கும், வாதங்களுக்கும் பதில் அளிக்க முடியாமல் என்னை தாக்குகிறார்கள், அனைத்தையும் எதிர்கொள்ள தயாராக உள்ளேன்’ என கார்த்திக் சிதம்பரம் தெரிவித்தார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய காங்கிரஸ் எம்.பி கார்த்திக் சிதம்பரம்...

”சிபிஐ விசாரணை என்பது ஒன்றும் எனக்கு புதிதில்லை. இந்தியாவில் இதுவரை யார் மீதும் 6 முறை ரெய்டு நடத்தியதாக வரலாறு இல்லை, 6 முறை ரெய்டு செய்தும் தற்போது வரை எதையும் கண்டுபிடிக்கவில்லை, விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்று மன உளைச்சலை ஏற்படுத்தி வருகின்றனர்.

என்னிடம் 27 மணி நேரம் விசாரணை நடத்தி உள்ளனர். என்ன கேள்விகளை கேட்டனர் என்பதை வெளியிடாமல் இருப்பது ஏன்?. என்னிடம் விசாரணை மேற்கொள்வதை நேரலை செய்ய வேண்டும்.

2019ஆம் ஆண்டிற்கு பிறகுதான் நான் எம்.பி ஆனேன் பாராளுமன்றத்தில் நான் எடுத்த குறிப்புகளை எல்லாம் எடுத்து சென்றுள்ளனர். அதனை எடுத்து செல்ல என்ன காரணம் உள்ளது. என் தந்தை முன்வைக்கும் வாதங்களை எதிர்கொள்ள முடியாமல் என்னை தாக்கி வருகின்றனர். இதனை எதிர்கொள்ள தயாராக உள்ளேன்” என தெரிவித்தார்.

மேலும் கபில் சிபில் கட்சியில் இருந்து விலகியது மன வருத்தத்தை அளிப்பதாகவும் தெரிவித்தார்.