தமிழ்நாடு

குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு- சென்னையில் இஸ்லாமியர்கள் பேரணி

குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு- சென்னையில் இஸ்லாமியர்கள் பேரணி

Rasus

குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக சென்னை ஆலந்தூரில் இஸ்லாமியர்கள் குடும்பத்துடன் பேரணியில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் நடைபெற்ற இந்தப் பேரணியில், மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலர் தமிமுன் அன்சாரி உள்ளிட்டோர் பங்கேற்றனர். சென்னை ஆலந்தூரில் இருந்து ஆளுநர் மாளிகை நோக்கி பேரணியாக செல்ல திட்டமிடப்பட்ட நிலையில், அதற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்தனர்.

இதையடுத்து, ஆலந்தூர் போக்குவரத்து பணிமனையில் இருந்து அக்கோ காலனி வரை ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்கு சிறுவர் - சிறுமிகளுடன் பேரணியாக சென்றனர். பின்னர் நடைபெற்ற கூட்டத்தில், குடியுரிமை சட்டத் திருத்தத்தால் இஸ்லாமியர்கள் மற்றும் இலங்கைத் தமிழர்கள் பாதிக்கப்படுவதாகவும், இதனால் குடியுரிமை சட்டத் திருத்தத்தை திரும்பப்பெற வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.