தமிழ்நாடு

இசைஞானி இளையராஜாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் - பிரதமர் மோடி வழங்குகிறார்

இசைஞானி இளையராஜாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் - பிரதமர் மோடி வழங்குகிறார்

webteam

இசைஞானி இளையராஜாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி கௌரவ டாக்டர் பட்டம் வழங்குகிறார் என காந்திகிராம பல்கலைக்கழக துணை வேந்தர் (பொறுப்பு) குர்மித்சிங் தெரிவித்தார்.

திண்டுக்கல் அடுத்துள்ள சின்னாளப்பட்டி காந்தி கிராம பல்கலைக் கழகத்தில் 36 வது பட்டமளிப்பு விழா நாளை 11 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில், பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின், கவர்னர் ஆர்என்.ரவி ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.

கொரோனா தொற்று காரணமாக கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் பட்டமளிப்பு விழா நடைபெறவில்லை. இதனையடுத்து நாளை நடைபெறும் விழாவில் 2018 - 2019, 2019 - 2020 ஆம் ஆண்டு இளங்கலை, முதுகலை, டிப்ளமோ முடித்த 2,314 மாணவ மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்படுகிறது.

இதில், அதிக மதிப்பெண் எடுத்து தங்கப்பதக்கம் பெற்ற 4 பேருக்கு பிரதமர் மோடி பட்டம் மற்றும் பதங்களை வழங்க உள்ளார். இதையடுத்து இசைஞானி இளையராஜா, மிருதங்க வித்வான் உமையாள்புரம் சிவராமன் ஆகிய இருவருக்கும் கௌரவ டாக்டர் பட்டத்தையும் பிரதமர் மோடி வழங்க உள்ளார்.