தமிழ்நாடு

மலைக்குன்றுகளில் இருந்து மாற்று மணல் - ஆய்வாளர் முருகேசன் (வீடியோ)

webteam

மலைக்குன்றுகள், தமிழகத்தில் நிலவும் மணல் தட்டுப்பாட்டிற்கு மாற்றாக அமையும் என்கிறார் ஆய்வாளர் முருகேசன். ஆற்றுப்படுகைகளில் உள்ள மணல் அள்ளப்படுவதால், நிலத்தடி நீர் மட்டம் குறைந்து விவசாயம் பாதிக்கப்படும் சூழலும், குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அவலமும் ஏற்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டு முருகேசன் நிகழ்த்திய ஆய்வில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள மலைக்குன்றுகள் மற்றும் திட்டுக்களில் உள்ள பாறைகளை உடைத்தால், அதிலிருந்து பெறப்படும் சிலிக்காவைக் கொண்டு மணல் தேவையைப் பூர்த்தி செய்யலாம் என்று கண்டறிந்துள்ளதாகக் கூறுகிறார்.